தமிழ்நாடு

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல் ட்வீட்

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல் ட்வீட்

webteam

தமிழக அரசு யாருக்கோ சாமரம் வீசுகிறது என மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது.தமிழகத்திற்குள் இன்று நுழைந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சென்றடைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. பல இடங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், " சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு" என பதிவிட்டுள்ளார்.