குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்தது தமிழினத்துக்கு செய்த துரோகம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார். அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை சட்டத்திற்கான அவசரம் என்ன என்கிற கேள்வி எழுவதாகவும், அதுவே நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி என்றும் கமல்ஹாசன் கூறினார்.
வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில் தான் இருந்திருக்கிறது எனக் கூறியுள்ள கமல்ஹாசன், தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது எனத் தெரிவித்தார்.