தமிழ்நாடு

"அரசு எவ்வழியோ, அதிகாரிகள் அவ்வழி!" - ஊழல் விவகாரத்தில் கமல் கருத்து

"அரசு எவ்வழியோ, அதிகாரிகள் அவ்வழி!" - ஊழல் விவகாரத்தில் கமல் கருத்து

webteam

லஞ்சம் பெறுவதில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்

தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.