ஜல்லிக்கட்டு என்பதற்கு பொருள் ஏறு தழுவுதல் ஆகும். இதனை போட்டியாகத்தான் கருத வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், ஜல்லிக்கட்டு என்பதற்கு பொருள் ஏறு தழுவுதல் என்பதே என்றார். ஏறு தழுவுதல் என்ற வார்த்தையிலேயே ஒரு அன்பு இருக்கிறது என்று அவர் விளக்கினார். வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் மாடுகள் கொல்லப்படுவதாகவும் ஜல்லிக்கட்டில் அப்படி அல்ல எனவும் கமல்ஹாசன் கூறினார். போட்டிக்குப் பின்பும் அவை பரிவுடன் வளர்க்கப்படும் என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை அல்ல எனவும் இதைப் போட்டியாக தான் கருத வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.