தமிழ்நாடு

“அநீதிக்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்கட்டும்” - ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

“அநீதிக்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்கட்டும்” - ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

webteam

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் நலிவுற்றுள்ளதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் என ஸ்டாலின் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் தமிழகம் முழுவதும் திமுகவைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கேக் வெட்டியும், அன்னதானம் அளித்தும் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.