தமிழ்நாடு

“இதுபோன்ற கொடுங்கோன்மை அடங்கும்வரை எனது போராட்டம் ஓயாது” - கமல்ஹாசன்

“இதுபோன்ற கொடுங்கோன்மை அடங்கும்வரை எனது போராட்டம் ஓயாது” - கமல்ஹாசன்

webteam

இதுபோன்ற கொடுங்கோன்மை அடங்கும்வரை எனது போராட்டம் ஓயாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்திற்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவர திட்டமிடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை. இதுபோன்ற கொடுங்கோன்மை அடங்கும்வரை எனது போராட்டம் ஓயாது. ஆவணங்கள் அடிப்படையில் ஒருவரின் முன்னோரை நிர்ணயம் செய்வதோ அவர்களை நீக்குவதோ தவறானது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் டிச.23ஆம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு கமலை நேரில் சந்தித்து திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளது.