தமிழ்நாடு

“எங்கும் வருவோம் உமைத் தடுக்க”- கமல்ஹாசன்

“எங்கும் வருவோம் உமைத் தடுக்க”- கமல்ஹாசன்

Rasus

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் அதனை தடுக்க அங்கும் வருவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தும் கடந்த 7-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு முன்னதாக டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சமூக இடைவெளியை பின்பற்றி கடைகளை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த 8-ஆம் தேதி இதுகுறித்த அவசர வழக்கில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் அதனை தடுக்க அங்கும் வருவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு.எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்”எனத் தெரிவித்துள்ளார்.