தமிழ்நாடு

கோவை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கமல் ஆய்வு

Rasus

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. இதில் 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.