கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகக் குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குணா பட வசனத்தைக் கூறி முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினார்.
முதல்வரின் பிறந்தநாளையொட்டி சென்னை பெரம்பூரில் முதல்வரின் கலைக்களம் மற்றும் உணவுத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை கமல்ஹாசன் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழிக்கு ஆபத்து நேரும்போது தெற்கில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் ஸ்டாலினின் குரல் எனக் கூறினார்.