டெல்டா மாவட்ட சாகுபடிக்காக நாளை காலை 11 மணியளவில் கல்லணை திறக்கப்பட உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து 3லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதனையடுத்து, அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட 10ஆயிரம் கன அடி தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும், நாளை பாசனத்திற்காக வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக வெளியேற்றப்படவுள்ளது.
இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் 10 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முறை வைக்காமல் அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.