தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் காயம் pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | கூட்டில் இருந்து திடீரென கலைந்த தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் காயம்

சங்கராபுரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் இன்று மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர்,

இதையடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரில் தேன்கூடு இருந்துள்ளது, இந்த தேன் கூட்டில் இருந்து திடீரென தேனீக்கள் கலைந்ததால் பள்ளி மாணவர்கள் இடைவேளையில் செல்லும்போது 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கொட்டியுள்ளது, இதில், காயமடைந்த பள்ளி மாணவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.