கள்ளக்குறிச்சி மாணவி
கள்ளக்குறிச்சி மாணவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

”நீட் தேர்வுக்கான பாடம் எனக்கு புரியவில்லை” - கள்ளக்குறிச்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!

Prakash J

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் பைரவி கடந்த ஆண்டு சின்னசேலத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து, அதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த நீட் தேர்வில் பைரவி குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்தூரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த மாதம் பைரவி சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தும் பாடங்கள் எதுவும் புரியவில்லை என்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

நீட் தேர்வு பயிற்சி மையத்திலிருந்து கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, வயிற்று வலி அதிகமாக உள்ளதாக பைரவி தெரிவித்ததைத் தொடர்ந்து சின்னசேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பைரவி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். பைரவி கடந்த செவ்வாய்க்கிழமை அன்றே பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாகவும் அதனை உறவினர்களிடம் தெரியப்படுத்தாமல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. நன்கு படிக்கக்கூடிய மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அன்று உணவு டெலிவரி பாய்.. இன்று உலகக்கோப்பையில் ஆட்டநாயகன்! ரசிகர்கள் வியக்கும் நெதர்லாந்து வீரர்!