திடீரென தீப்பிடித்து எரிந்த கார்  pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ; அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர்தப்பினார்.

PT WEB

செய்தியாளர்: பாலாஜி

பாண்டிச்சேரியைச் சேர்ந்த நெல்சன் மற்றும் அவரது மனைவி மற்றும் நண்பர்கள் என நான்கு பேர் இன்று பாண்டிச்சேரியில் இருந்து ஏற்காடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்சன் ஒட்டிச் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் மேம்பாலம் அருகே வந்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது

இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட நெல்சன், காரை நிறுத்திவிட்டு காரில் இருந்த நான்கு பேரும் உடனடியாக இறங்கி உயிர்தப்பினர். இது குறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருந்த போதிலும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.