தமிழ்நாடு

கழிப்பறை கட்டுமானப் பணியில் களமிறங்கிய கலெக்டர்

கழிப்பறை கட்டுமானப் பணியில் களமிறங்கிய கலெக்டர்

webteam

கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தானே கட்டுமான பணிகளையும் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

கழி்ப்பறை கட்டும் கொத்தனாருடன் இணைந்து விறுவிறுவென ஆட்சியரும் வேலையில் இறங்கினார். மண்வெட்டியால் குழிதோண்டி அதில் ஜல்லிக்கற்களை நிரப்பி செங்கல் வைக்கும் பணிகளையும் ஆட்சியரே செய்தார். இதை அருகிலிருந்து அதிகாரிகளும் மக்களும் வியப்புடன் பார்த்தனர். 

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஆய்வில் ஈடுபட்ட போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்களுக்கு அவரே பாடம் எடுத்தது குறிப்பிடதக்கது.