தமிழ்நாடு

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கபடி வீரர்கள்: 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கபடி வீரர்கள்: 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

webteam

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 கபடி விளையாட்டு வீரர்கள் ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்‌டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருப்புரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் 7 பேர் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் கிராமத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டில் கலந்துகொள்ள சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில் உள்ள கொள்ளிடம் ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கினர். 

இதில் நீச்சல் தெரிந்த 4 பேர் நீந்தி கரையேறியனர். அதன் பின்பு தகவலறிந்து சம்பவ இடத்தி்ற்கு விரைந்த தீயணைப்பு படையினர், 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கபடி வீரர்கள் சரவணன், பிரித்விராஜ் மற்றும் தினேஷ் ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.