விஜய் - வெங்கடநாரயணா Pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி.. ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணாவை நியமித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை.

Premkumar S

விஜய் நடிப்பில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெங்கட நாராயணா தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வர இருந்து சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். 

இந்தசூழலில் தான், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று தமிழக தெரிவித்துள்ளது.

எனினும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்?; கர்நாடக காங். அரசின் மாற்று அரசாக செயல்படுகிறதா தவெக அரசு? சினிமாக்காரரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும்? என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.