கருத்து மாறுபாடு ஏற்படுவதால் திமுகவிற்கும், திராவிட கழகத்திற்கும் இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டதாக அர்த்தமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக நடந்து கொண்டதற்கு எதிராகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாகவும் கி வீரமணி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். திமுக-தி.க இடையிலானது கூட்டணி அல்ல உறவு என்று குறிப்பிட்ட வீரமணி, கருத்து மாறுபாடுகள் ஏற்படுவது பகுத்தறிவு அடிப்படையில் இயற்கையே என்றார்.