தமிழ்நாடு

“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி

“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி

webteam

காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் உள்ள கட்சி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் சாமானிய தொண்டர் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத கோடீஸ்வரர் ரூபிமனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகளுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். 100 சதவீதத்தில் 90 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியில் வசதி படைத்தவர்கள்தான்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மிகுந்த வறுமையில் இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி என அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக போல பணத்தை வாரி இறைக்கும் கட்சி இந்தியாவிலேயே கிடையாது எனவும் தெரிவித்தார்.