தமிழகத்தில் இரண்டு அணிகளுக்கு இடையே தான் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நான் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை மூன்றாவது அணி நான்காவது அணிக்கெல்லாம் இடமில்லை. அதாவது யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் பாஜக அதிமுக கூட்டணி ஒரு அணி. மற்றும் அதை எதிர்த்து திமுகவின் மதசார்பற்ற கூட்டணி ஒரு அணி., இந்த இரண்டு கட்சிகள்தான் பிரதான கட்சிகள். மூன்றாவது அணி எல்லாம் களத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை." எனத் தெரிவித்தார்.