தமிழ்நாடு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்

webteam

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2020 பிப்ரவரி 15-ல் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த பேச்சு, பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி  சர்ச்சையானது. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார். அதேசமயம் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞரும் காவல் துறையினரும் ஆஜராகினர். அப்போது காவல்துறையினர் ஆர்.எஸ்.பாரதியை காவலில் வைக்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர். ஆனால் ஏற்கெனவே இதுகுறித்த வழக்கை முடித்து வைக்கக்கோரி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.