தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை அமர்வு அறிவிப்பு

webteam

ஜல்லிக்கட்டு வழக்கினை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசின் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அரசு சார்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து கூபா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 31ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அமித்தவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி 31ல் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.