கோவையில் சீனியர் மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவரின் 2, 500 ரூபாய் பணம் காணமல் போனதாக கூறி, சீனியர் மாணவர் ஒருவரை ஜூனியர்கள் இணைந்து தாக்கினர்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அந்த வீடியோவில் இருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இச்சூழலில் தாக்குதல் நடத்திய மாணவர்கள் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதில் 18 வயது பூர்த்தியடையாத 3 நபர்களை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கும், மற்றவர்களை சிறையிலும் அடைத்தனர். மேலும், மற்ற 7 பேர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.