இபிஎஸ், ஆதவ், திருமா எக்ஸ் தளம்
தமிழ்நாடு

Headlines: இபிஎஸ்ஸின் நம்பிக்கை முதல் ஆதவ் அர்ஜூனா புகார் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பாமக நிச்சயம் அதிமுகவுடன் வரும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை முதல் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆதவ் அர்ஜூனா புகார் வரை விவரிக்கிறது.

PT WEB

* தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருப்பதாகவும், அவர்கள் அதிமுகவுடன் நிச்சயம் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

* 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு விழும் 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தை உடையதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

* சர்வதேச விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

* தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா, தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

* பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவியை வைத்தது யார் என்பதை கண்டறியக் கோரி விழுப்புரம் சைபர் கிரைம் காவல்துறையில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்துள்ளார்.

இபிஎஸ், ஆதவ், திருமா

* ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்திற்காக 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

* போலியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வருமான வரி அதிகாரிகள் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உட்பட 18 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

* கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைக்க இடைக்கால தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் காவல் துறையினர் முறையற்ற விசாரணை நடத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

* ஆறு கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்ப அளிக்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.