தமிழக மீனவர்கள் கைது pt desk
தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால் கைதான 14 தமிழக மீனவர்கள்.. நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவலை கூடுதலாக நீட்டித்தது இலங்கை நீதிமன்றம்..

PT WEB

மயிலாடுதுறை மீனவர்களின் நீதிமன்றகாவலை டிசம்பர் 8ஆம் தேதி வரைநீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கடந்த 10ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். பின்னர் 14 மீனவர்களும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள்

இந்நிலையில் மயிலாடுதுறை மீனவர்களின் வழக்கு இலங்கை ஊர்காவல் துறைநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களின் ஆவணங்கள் மீன்வளத் துறையினரால் ஒப்படைக்கப்படாததால் நீதிமன்றகாவலை டிசம்பர் 8ஆம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டார்.