தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சில காரணங்களுக்காக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையை அணுகியுள்ளார். ஆனால் சில சட்டம் மற்றும் ஒழுங்கு பிரசனைகளை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. காவல்துறை அனுமதி மறுப்பை அடுத்து , சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ மிகவும் அமைதியான முறையிலும் , எந்த வன்முறைக்கு இடம் கொடாமலும் இந்த போராட்டத்தை நடத்த உளோம், ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கிறது, எந்த பிரச்னையும் இல்லாமல் போராட்டத்தை நடத்துவோம் என உறுதியளிக்கிறோம், அனுமதி கொடுங்கள்” என வாதிட்டார். அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி “ நீங்கள் வேண்டுமானால் பிரியாணி கடையில் அமைதியாக காத்திருக்கலாம், எல்லோரும் இருப்பாங்கனு சொல்ல முடியாது” என்றார்.