journalist mani
journalist mani ptweb
தமிழ்நாடு

“பிரதமர் கலைஞரைப் பற்றி பேசியது வழக்கத்திற்கு மாறானது” - மூத்த பத்திரிக்கையாளர் மணி கருத்து

Angeshwar G

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், வரும் 17-ம் தேதி எதிர்கட்சிகள் பெங்களூருவில் இரண்டாம் முறையாக கூட்டம் நடத்த உள்ளன. அதே சமயத்தில் பாஜகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பையும் விடுத்துள்ளது.

இவைகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் மணியை புதிய தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் நேர்காணல் செய்தார்.

“எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. மத்திய புலனாய்வு ஏஜென்சிக்கள், அமலாக்கத்துறை, பாஜகவின் எதிர்ப்பு நிலை போன்ற புள்ளிகளில் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். எதிர்கட்சிகளுக்கு இது கைகொடுக்குமா?”

கண்டிப்பாக கை கொடுக்கும். கை கொடுக்க வேண்டும். மோடிக்கு எதிரான ஒரு நிலை மெதுவாகவும் அதேசமயம் உறுதியாகவும் உருவாகிறது. பாட்னா கூட்டத்திற்கு பின் பாஜக கலங்கி நிற்பதும் உண்மை. அதனால் தான் பிரதமர் போபாலில் கருணாநிதியைப் பற்றி பேசுகிறார். இதுவரை அவர் கலைஞரைப் பற்றி எங்கும் பேசியதில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியில் அவர் திமுகவின் பெயரை சொல்லியதில்லை.

கலைஞர் உடல்நலம் குன்றி இருந்த போது கோபாலபுரம் இல்லத்தில் வந்து சந்தித்தார். அந்தவகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதை உண்டு என நான் கேள்விப்பட்டுள்ளேன். மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர் என்பதால் மோடிக்கு கலைஞர் மீது மரியாதை உண்டு. இருப்பினும், போபாலில் பிரதமர் கலைஞரைப் பற்றி பேசியது வழக்கத்திற்கு மாறான ஒன்று. குறிப்பாக திமுகவையும் கருணாநிதியையும் ஊழல் கட்சி, வாரிசு அரசியல் என சொல்ல வேண்டிய காரணம் என்ன? ஏனென்றால் இவர்கள் கலங்கி போயுள்ளார்கள்!” என்றார்.

மேலும் இதுபற்றி பத்திரிகையாளர் மணி பேசியவற்றின் முழு விவரத்தை, கீழுள்ள காணொளியில் காண்க...!