பேரறிவாளன் கடந்த வியாழக்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டதையொட்டி, ஜோலார் பேட்டை பகுதிகளில் மாவட்ட எஸ்பி பகலவன் ஆய்வு மேற்கொண்டார்.
தனது தந்தை உடல்நலக் குறைவாக இருப்பதால் ஒரு மாதம் பரோல் பெற்று வெளியே வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளன், தற்போது ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் உட்பட பலர் வந்து அவரை சந்திக்க வருகின்றனர். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட எஸ்பி பகலவன் பேரறிவாளன் தங்கியிருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸார் தங்கள் பணியினை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பேரறிவாளனை சந்திக்க வரும் நபர்களின் முழுவிவரம் சேகரிக்க வேண்டும் எனவும் போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.