தமிழ்நாடு

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்மு‌றையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்மு‌றையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

Rasus

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சாந்தாங்காடு பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக‌ முழங்கால் மூட்டு தேய்மானம் காரணமாக அவதிப்‌பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தஞ்சை இணை இ‌யக்குநர் மருத்துவர் ஜெயசேகர் சுப்ரமணியன் மற்றும் பட்டுக்கோட்டை தலைமை மருத்துவர் ராணி அசோகன் ஆகியோரின் ஆலோசனைப்படி, எலும்பு முறிவு மருத்துவர் நியூட்டன் மற்றும் சிவா ஆகிய மருத்துவக் குழுவினர் மணிமேகலைக்கு வெற்றிகரமாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நடைபெற்ற முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். இந்த அறுவை சிகிச்சை சிக்கலானதாக இருந்தபோதும் ஒன்றரை மணிநேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்ததாக மருத்துவர்கள் கூறினர்.