தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது.
இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதேபோல், தென் மாநில மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பிஜூ ஜனதா தளம் சார்பில் அமர் பட்நாயக், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் சார்பாக கே.டி. ராமாராவ், பவன் கல்யாண் கட்சியான ஜன சேனாவின் எம்.பி. உதய் சீனிவாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.