தமிழ்நாடு

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

webteam

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான 24 ஆயிரத்து 296 வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதற்காக லால்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 20 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டன‌. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்

 காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14782 வாக்குகளும், என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் பெற்றனர்