எலான் மஸ்க் - ஜோ பைடன்  முகநூல்
தமிழ்நாடு

“எலான் மஸ்க்கால் அமெரிக்காவிற்கு ஆபத்து..” - அதிபர் ஜோ பைடன்

தனது பிரிவு உபசார உரையாற்றிய பைடன், அதீத செல்வம், அதிகாரம் கொண்ட சுயநலக்குழு அமெரிக்காவில் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

PT WEB

எலான் மஸ்க் உள்ளிட்டோரால் அமெரிக்காவிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக, அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

தனது பிரிவு உபசார உரையாற்றிய பைடன், அதீத செல்வம், அதிகாரம் கொண்ட சுயநலக்குழு அமெரிக்காவில் உருவாகி வருவதாக தெரிவித்தார். அந்தக் குழு ஜனாநாயம், சுதந்திரம், அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக கூறினார். தொழில்நுட்ப தொழில்துறை தலைவர்களின் சாத்தியமான எழுச்சி, அமெரிக்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தான் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், அதிபர் பதவியிலிருக்கும்போது தவறு செய்வோருக்கு தண்டனை வழங்கும் வகையில், அரசமைப்பை திருத்த வேண்டுமெனவும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.