வேலை வாய்ப்பு செய்திகள் முகநூல்
தமிழ்நாடு

வேலை வாய்ப்பு செய்திகள்!

வேலை வாய்ப்பு குறித்தான செய்திகளை இங்கே காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

1. பட்டதாரிகளுக்கான வேலை இதோ...

பணி நிறுவனம்: ஐ.டி.பி.ஐ.வங்கி

காலி பணி இடங்கள்: 650

பதவியின் பெயர்: ஜூனியர் அசிஸ்டென்ட் மானேஜர் (கிரேடு ஒ)

கல்வி தகுதி:1-3-2025 அன்றைய தேதிப்படி பட்டப் படிப்பு படித்தவர்கள்.

அடிப்படை கணினி அறிவும். பிராந்திய மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 12-3-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 25.

அதாவது 1-3-2000-க்கு முன்போ, 1-3-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-3-2025

இணையதள முகவரி : https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்த இடங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்தப் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்தப் பதவிகள் அரசுப் பணி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு: 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம்.

அனுபவம் மற்றும் கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும், அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

கடைசி தேதி மற்றும் அனுப்ப வேண்டிய முகவரி: 07.03.2025 என்ற தேதிக்குள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணையதள முகவரி: https://dsdcpimms.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.