ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம், தற்கொலையே என்று டெல்லி காவல் துறை மீண்டும் தெரிவித்துள்ளது.
டெல்லி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பெற்றோரின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழு மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. சந்தேக மரணம் என கருதப்பட்ட முத்துகிருஷ்ணன், தற்கொலை செய்து கொண்டதாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாணவர் முத்துகிருஷ்ணன் உயிரிழப்பு சம்பவம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.