தமிழ்நாடு

ஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு

ஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு

webteam

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்காக ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக மருத்துவக் குழு கேரளா விரைந்தது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டு 350 மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனைதொடர்ந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்காக பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தைக் கேரள வெள்ள நிவாரணத்திற்காக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக எலும்பியல் பேராசிரியர் ஜகதீஷ் மேனன் தலைமையில் 34 பேர் கொண்ட மருத்துவக் குழு கேரளாவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.