உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

ரூ.4 ஆயிரம் கோடி.. ஜியோ ஹாட்ஸ்டாருடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ஜியோ ஹாட் ஸ்டாரின் 2026ஆம் ஆண்டுக்கான முக்கிய படங்கள், நிகழ்ச்சிகள், இணையத் தொடர்களின் அறிவிப்பு நிகழ்ச்சியில் தமிழக அரசுடன் 4 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

PT WEB

ஜியோ ஹாட் ஸ்டாரின் 2026ஆம் ஆண்டுக்கான முக்கிய படங்கள், நிகழ்ச்சிகள், இணையத் தொடர்களின் அறிவிப்பு நிகழ்ச்சியில் தமிழக அரசுடன் 4 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், நாகார்ஜுனா, மோகன்லால், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் படைப்பாற்றல் சூழலை வலுப்படுத்தும் அரசின் அனைத்துப் பணிகளையும் திராவிட மாடல் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. OTT தளங்கள் இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன. கன்டென்ட்தான் ராஜா. கதைச் சொல்லச் சரியாக இருந்தால், அது மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பாராட்டப்படும்.

இளம் படைப்பாளர்களைப் பயிற்சிப்படுத்தி, உள்ளூர் திறமைகளுக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும். தமிழ்நாடு வலுவான படைப்பாற்றல் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியப் பிராந்தியம், குறிப்பாக தமிழ்நாடு, Hotstarஉடன் இணைந்து. இந்தத் துறைக்காக ரூ.12,000 கோடி முதலீட்டை கொண்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 1,000 நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 15,000 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை வளர்க்கும். Jio Hotstar போன்ற தளங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்” என தெரிவித்தார்.