தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

sharpana

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

’கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தணிக்கை செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நகர கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு என தனித்தனியாக சிறப்பு தணிக்கை செய்யப்பட உள்ளது.

இதனோடு சோதனை தணிக்கை மேற்கொள்ளும் அலுவலர்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை செய்து அறிக்கை அனுப்பும் பணி வரும் 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, நகைகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.