தமிழ்நாடு

திருட்டுப்போன ஐம்பொன் ஏசு சிலை மீட்பு

திருட்டுப்போன ஐம்பொன் ஏசு சிலை மீட்பு

webteam

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருட்டுபோன ஐம்பொன் ஏசு சிலை மீட்கப்பட்டது.

எருக்கூரிலுள்ள தூய சித்தாந்திரை ஆலயத்தின் குழந்தை ஏசு சிலை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து பூட்டை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் ஏசு சிலையை திருடிச்செல்வது தெரியவந்தது. ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி என்பவர்தான் சிலையை திருடியவர் என உறுதி செய்யப்பட்டது. சிலை திருடியதை கலியமூர்த்தி ஒப்புக்கொண்ட நிலையில், அவரிடமிருந்து சிலை பறிமுதல் செய்யப்பட்டு ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.