தமிழ்நாடு

வைரமுத்து விவகாரம்: ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்

webteam

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் கோயிலில் வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஆண்டாள் கோயிலில் ராமானுஜ ஜீயருடன் பக்தர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ராமானுஜ ஜீயர் கடந்த மாதம் 17ஆம் தேதி உண்ணாவிரத்தை மேற்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ‌உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. பின்னர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க, பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஜீயர் காலக்கெடு விதித்திருந்தார். அதன்படி வைரமுத்து மன்னிப்பு கேட்காததால், ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைரமுத்து தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து ஆண்டாள் கோயிலில் மன்னிப்பு கேட்கும் வரை பக்தர்கள் ஓயமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.