தமிழ்நாடு

கொத்தனார் வளர்ச்சியில் பொறாமை -இரும்புப் பலகையை திருடி விற்றவர்கள் கைது

webteam

பொறாமையின் காரணமாக கொத்தனாருக்குச் சொந்தமான பொருட்களை திருடி விற்ற மற்றொரு கொத்தனாரையும் அவரது நண்பர்களையும் காவல்துறைனர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வீர்பாண்டிப் பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திர சேகரன். இவர் கொத்தனாராகவும், கட்டடங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாடகைக்கு விட்டும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கட்டடத்தின் கட்டுமான பணிக்காக இரும்பு தடுப்பு பலகையினை வாடகைக்கு விட்ட சந்திர சேகரன், அதனை திருப்பி வாங்கி தனது வீட்டிற்கு வெளியே வைத்து உள்ளார். அந்த இரும்பு பலகை காணாமால் போனதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரினை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த நிவேந்திரன், குணால், முத்துகாமு, விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் கொத்தனார் தொழில் செய்து வரும் முத்துகாமு, சந்திர சேகரின் வளர்ச்சியில் பொறாமைக் கொண்டு தனது நண்பர்களுடன் இணைந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும், திருடிய பொருட்களை தேனியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து திருடப்பட்ட பொருட்களை மீட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்தனர்.