ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் மீது குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு அதனை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜல்லிக்கட்டு நடத்தாமல் போவதற்கு யார் காரணம் என்பது முக்கியம் அல்ல. மேலும் காங்கிரஸ் ஒரு காரணமா இல்லையா என்பது இப்போது பிரச்னை இல்லை’ என தெரிவித்தார். எனவே காங்கிரஸ் மீது குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு உச்சநீதிமன்ற உத்தரவை அகற்றி சட்டபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.