உயிரை விட்ட நாய்  ஹென்றி
உயிரை விட்ட நாய் ஹென்றி PT WEB
தமிழ்நாடு

பாம்பை கடித்துக் கொன்று எஜமானின் குழந்தைகளைக் காத்த விஸ்வாச ‘நாய்’! இறுதியில் உயிரை விட்ட சோகம்!

webteam

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வேந்திரன். இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், கடந்த 11 ஆண்டுகளாக ஹென்றி என்ற நாயை வீட்டில் வளர்த்து வந்தார்.

நாயின் உரிமையாளர் செல்வேந்திரன்

பாம்பிடம் போராடி உயிரை விட்ட நாய்!

இந்நிலையில், இவருடைய, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அருகில் இருந்த முந்திரி தோப்பில் இருந்து 6 நீளம் கொண்ட பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த வளர்ப்பு நாய் "ஹென்றி" அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தன் காலால் தள்ளியும், குளைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளது. பின்னர் அந்த பாம்பை விரட்டி அடிக்க நீண்ட நேரம் போராடி பாம்பைக் கடித்துக் குதறி விட்டு மயங்கி விழுந்துள்ளது.

சோகத்தில் மூழ்கிய குடும்பம்

இதனையடுத்து நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த, நாயின் உரிமையாளர் செல்வேந்திரன், மயங்கிக் கிடந்த நாயைக் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். நாயைப் பரிசோதித்த மருத்துவர் நாய் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

12 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல வளர்த்து வந்த நாய், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.