தமிழ்நாடு

ஜெயலலிதா சாப்பிட்ட உணவு பட்டியல்..!

ஜெயலலிதா சாப்பிட்ட உணவு பட்டியல்..!

Rasus

ஜெயலலிதா தனக்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என தன் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியாகி உள்ளது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா தனக்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என தன் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இந்தப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் விவரம்:-

அதிகாலை 4.55-க்கு லோட்டஸ் தண்ணீர், 5-05 லிருந்து 5.35-க்குள்- காலை உணவு இட்லி 1.5, பிரட் 4 ஸ்லைஸ், காஃபி 400 மில்லி, இளநீர் 230 மில்லி

5.45 மணிக்கு க்ரீன் டீ 200 மில்லி, 8 மணிக்கு ரிவைவ்- 200 மில்லி, 8.55-க்கு ஒரு ஆப்பிள், 9.40-க்கு காஃபி 120 மில்லி, போர்பன் பிஸ்கெட் 5, காலை 11.35 மணிக்கு பாஸ்மதி ரைஸ் ஒரு கப்.

மதிய உணவு 2 மணியிலிருந்து 2.35 வரை- பாஸ்மதி ரைஸ் சாப்பாடு 1.5 கப், தயிர் 1 கப், கிர்னி பழம் அரை கப், மதியம் 2.45க்கு ஜான்வியா என்கிற மாத்திரை, மாலை 5.45க்கு காபி 200 மில்லி.

இரவு உணவு மாலை 6.30 லிருந்து 7.15-க்குள் வால்நட், உலர் பழங்கள் அரை கப், இட்லி உப்புமா 1 கப், தோசை 1, பிரட் 2 ஸ்லைஸ், பால் 200 மில்லி, பின்னர் 7.25க்கு மிக்னர் என்ற மாத்திரையும், ஜான்வியா என்ற மாத்திரையும் என தனது கைப்பட எழுதியுள்ளார்.

அப்போது ஜெயலலிதாவின் எடை 106.9 கிலோவாக இருந்துள்ளது.