பிரதமருக்கு ஜெயலலிதா 115 கடிதங்களை எழுதியதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சென்னை அருகே கப்பல்கள் மோதலால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆயிரம் ரூபாய், நிவாரண உதவியை, முதல்வரிடம் இருந்து சில மீனவர்கள் பெற்றுக் கொண்டனர். எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 30 ஆயிரம் மீனவர்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் குறுகிய காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் அரசு கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா 115 கடிதங்களை எழுதியதாகவும் தெரிவித்தார்.