சுகாதாரத்துறைச் செயலரின் வாய்மொழி உத்தராவில்தான் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மூன்றாவது முறையாக ஆஜரான பாலாஜியிடம், திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தல்களுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக ஆணையம் சில கேள்விகளை முன்வைத்தது. அதற்குப் பதிலளித்த அவர், சுகாதாரத்துறைச் செயலரின் வாய்மொழி உத்தரவில்தான், ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும், சிகிச்சையிலிருந்த ஜெயலலிதாவிடம் இருந்து கையெழுத்து பெற முடியாத நிலையில், மாற்றாக அவரிடம் கைரேகை பெறுவது தொடர்பாக முதல்வர் அல்லது தலைமைச் செயலரிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு ஏதும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.