தமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்கு அனுமதி பெற வேண்டும் - ஜெ.அண்ணன் மகன் தீபக்

ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்கு அனுமதி பெற வேண்டும் - ஜெ.அண்ணன் மகன் தீபக்

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக குடும்பத்தினரின் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையை படமாக எடுக்க திரையுலகில் கடும் போட்டி நிலவுகிறது. மூன்று இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்வை படமாக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமெடுப்பவர்கள் முதலில், குடும்பத்தினரிடம் அனுமதி பெற வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.