தமிழ்நாடு

ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்: அமைச்சர் ஜெயக்குமார்

webteam

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைப்பெற்ற வருமானவரித்துறை சோதனை மன வேதனை தருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வருமானவரித்துறை சோதனை மன வேதனை தருவதாக தெரிவித்தார். ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர்கள் இந்த இல்லத்தில் இருந்ததால் தான் இந்தப்பிரச்னைகள் வந்துள்ளது. அதிமுகவினர் கோயிலாக கருதும் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடக்க தினகரன் குடும்பம் தான் காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடைப்பெற்றது. ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனின் அலுவலக அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. 21 ஆண்டுகளுக்குப்பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்துள்ளது.