தமிழ்நாடு

ஜெயலலிதா கை அசைத்தாரா? - விசாரணையில் ஆணையம்

ஜெயலலிதா கை அசைத்தாரா? - விசாரணையில் ஆணையம்

webteam

அப்போலோவில் ஆளுநர் வித்யாசா‌க‌ர் ராவைப் பார்த்து ‌முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கை அசைத்தாரா என்பது பற்றி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போலோ மருத்துவ‌னையில் ‌அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை, அப்போதைய‌ ஆளுநர் வித்யாசா‌க‌ர் ராவ், ‌அக்டோபர் ஒன்று மற்றும் 23 ஆகிய தேதிகளில் பார்த்தார். அப்போது ஜெயலலிதா எந்த நிலையில் இருந்தார், ஆளு‌நரின் வருகையை அவர் உணர்ந்தாரா ‌‌என்பது பற்றி, வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் இன்று விளக்கம் கேட்டது.

வித்யாசாகர் ராவைப் பார்த்து ஜெயலலி‌தா கை அசைத்தாரா? சைகை செய்தாரா என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுதவிர அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராஜ்பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமு‌கசாமி ஆணையத்தில் ஆஜராகி வி‌ளக்கம் அளித்தனர்.