ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியுடன் இணைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு பேரில் அமைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து வரும் இந்த ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுடன் நீட்டிக்கப்பட்ட அவகாசமும் திரும்பவும் முடிவடைந்தது. ஆகவே தற்போது மேலும் 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.