தமிழ்நாடு

மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’

மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதன்படி, இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதவின் 3ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட‌ அதிமுகவினர் பேரணியாகச் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் ஜெயலலிதாவிற்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினர். சமூக வலைத்தளமான ட்விட்டரில் #AmmaForEver #Jayalalitha #Thalaivi உள்ளிட்ட ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான ஹேஸ்டேக்குகள் சென்னை, இந்தியா மட்டுமின்றி உலக ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தன.