ஜெயலஷ்மி
ஜெயலஷ்மி PT
தமிழ்நாடு

“எனது கட்சியின் சின்னம் இரட்டை இலை, இரட்டை ரோசா..” - ஜெயலலிதா பெயரை சொல்லி கிளம்பும் ஜெ.ஜெயலஷ்மி!

Jayashree A

தேர்தல் களம் சூடுபிடித்துவரும் இந்நேரத்தில், புதுபுது கட்சிகள் தோன்றி தங்களுக்கான சின்னத்தை பதிவு செய்து வருகிறது. உதாரணத்திற்கு விஜய், மன்சூர் அலிகான் போன்றவர்கள் அதே போன்று தற்பொழுது ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜெ.ஜெயலஷ்மி என்பவர், புதிதாக கட்சி ஒன்றை தோற்றுவித்து, அதற்கு எம்ஜியார் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம். என்று பெயரை பதிந்துள்ளார். இவரது கட்சியானது மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபொழுது,

”நான் உங்க புரட்சி தலைவி ஜெ. ஜெலலிதாவின் மகள் ஜெ.ஜெயலஷ்மி. நான் எம்ஜியார் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம் என்ற புதுகட்சியை துவங்கியுள்ளேன். அதை பதிவுசெய்வதற்காக டெல்லி வந்துள்ளேன். என் அம்மாவின் கட்சியான இரட்டை இலை கட்சியை 4 ஆக பிரித்து ஒருவர்கொருவர் அடித்துக்கொண்டு, அம்மாவின் பெயரை கெடுத்து வருகின்றனர். ஆகவே இரட்டை இலை கட்சியை திரும்ப பெறவும், எங்கம்மாவின் சொத்தை திரும்ப வாங்கவும் நான் வழக்கு பதிவு செய்ய நினைத்துள்ளேன்.

எனது கட்சியின் சின்னம் இரட்டை இலை இரட்டை ரோசா.. தேனிதொகுதியில் நான் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதியில் எனது வேட்பாளார்கள் போட்டியிடுவார்கள்.” என்றார்.

ஜெயலலிதாவின் பெண் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

”நாலு வருடம் முன்பே நான் டி.என்.ஏ டெஸ்டுக்கு ரெடி என்று சொல்லிவிட்டேன். ஆனால் சில கட்சியில் உள்ளவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அனைத்தையும் மறுக்கிறார்கள். நான் சிறுவயதில் அம்மாவை சாமுண்டேஸ்வரி கோவில் பூஜைக்கு வரும்பொழுது பார்த்து இருக்கிறேன். போயஸ்கார்டனில் ஒரு முறையும், அம்மா ஹாஸ்பிட்டலில் இருக்கும்பொழுது ஒருமுறையும் அம்மாவை பார்த்து இருக்கிறேன்.

மைசூரில் ஜெயலட்சுமி என்பவரிடம் எங்கம்மா என்னை கொடுத்துவிட்டார்கள். அவர் என்னை வேறுஒருவரிடம் கொடுத்தனர். அங்கு நான் வளர்ந்தேன்.” என்று கூறுகிறார்.